கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 9, 2010

நிலவில் மிகவும் குளிர்ச்சியான பகுதி

இரவில் குளிர்ச்சி தருவது நிலவு. ஆனால் சூரிய குடும்பத்திலேயே வெதுவெதுப்பான கிரகம் சந்திரன்தான். இருந்தாலும் நிலவின் குளிர்ச்சியான பகுதி தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நாசா விண்வெளி மையத்தின் எல்.ஆர்.ஓ. என்ற நிலவை ஆராயும் விண்கலம் இதை கண்டுபிடித்தது. நிலவின் தென் மேற்குப் பகுதிதான் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இரவில் மைனஸ் 294 டிகிரி செல் சியஸ் குளிருக்குச் செல்கிறது.

நிலவு 1.54 டிகிரி சாய்வாக இருந்து பூமியை சுற்றி வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப மாற்றம் அதிகமாக வித்தியாசப்படுவதில்லை. நில நடுக்கோட்டுப் பகுதியில் மட்டும் சற்று அதிகமான வெப்பமும், அதிகமான குளிரும் நிலவுகிறது.

நிலநடுக்கோட்டுப் பகுதியில் பகலில் 127 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அதே பகுதியில் இரவு மிக அதிகமான குளிரும் ஏற்படுகிறது. சூரியன் 6 மாதகாலம் பூமியின் தென் அரைக்கோளத்திலும், மற்ற 6 மாதம் வட அரைக்கோள பாதையிலும் சுற்றிவரும். சமீபத்தில் அக்டோபரில் தென் அரைக்கோளத்தில் பயணித்தபோது வெப்ப அளவீடுகள் கணிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நிலநடுக்கோட்டின் தென்பகுதியில் மைனஸ் 238 செல்சியஸ் வரையும், தென்மேற்கு பகுதியில் மைனஸ் 294 செல்சியஸ் வரையும் குளிர் நிலவுகிறது. ஆனால் வடபகுதியில் அதிகஅளவில் வேறுபாடுகள் இல்லை.

கிரகங்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவது இந்த மாறுபாட்டுக்கு காரணம் ஆகும். நிலவின் குளிர்ச்சியான தென்மேற்குப் பகுதிக்கு `ஹெர்மைட்’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo