கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 11, 2010

இணைய ஆபத்தும் பாதுகாப்பும்


பொதுவாக கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் நாம் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லாவா சாப்ட் (Lavasoft) நிறுவனம், வரும் ஆண்டில் ஐந்து வகையான ஆபத்துகள் இருக்கும் எனப்பட்டியலிட்டுள்ளது.

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மீது தாக்குதல், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் தாக்குவதற்கு ஏதுவான இடம் பார்த்து நுழைதல், நாசம் விளைவிக்கும் தொகுப்புகள் தயாரிப்பு, விண்டோஸ் தவிர மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் மொபைல் போன்களில் மால்வேர் புரோகிராம்கள் என இவற்றை வரிசைப்படுத்தியுள்ளது.

(லாவா சாப்ட் நிறுவனம் 1999ல் தொடங்கப்பட்டது. இதனை ஒரிஜினல் ஆண்ட்டி ஸ்பைவேர் நிறுவனம் என அழைப்பார்கள். இதனுடைய இலவச ஆட்–அவேர் புரோகிராம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமானது. இதுவரை 40 கோடிக்கு மேலான எண்ணிக்கையில் இது டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது)

1. 2009ஆம் ஆண்டின் இறுதியில் ஆன்லைன் கிரிமினல்கள் நடவடிக்கை 477% உயர்ந்து இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆட் அவேர் (AdAware) என்னும் ஆண்ட்டி மால்வேர் தளத்தில், நாசம் விளைவிக்கும் புதிய புரோகிராம்களின் பட்டியலின் எண்ணிகை அந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.

வழக்கமான முறையிலேயே இந்த மால்வேர் புரோகிராம்களின் வேலை தொடரும். அதே நேரத்தில் புதிய சிஸ்டம் புரோகிராம்கள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் வழியாகவும் இவை தங்கள் வேலையை மேற்கொள்ளும் என இந்நிறுவனம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களை இந்த வகை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இலக்காகக் கொண்டு நிச்சயம் மால்வேர் புரோகிராம்கள் வடிவமைக்கப்படும். மைக்ரோசாப்ட் இதனைத் தடுத்து, சிஸ்டத்தி னை பாதுகாப்பானதாக அமைக்கும் பட்சத்தில், புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைத் தங்கள் தளமாக மால்வேர்கள் கொள்ளலாம்.

எனவே ஆப்பிள் மேக் மற்றும் பிற சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களுக்கென ஒரு ஆண்ட்டி வைரஸ் சிஸ்டத்தினை உருவாக்கிக் கொள்வது இந்த ஆண்டில் ஏற்படும்.

3.ஸ்கேர்வேர் (Scareware) என்ற வகையில், நேரடியாகவே வைரஸ் புரோகிராமாக உருவாக்கப்படுபவற்றின் எண்ணிக்கையும் இந்த ஆண்டில் அதிகரிக்கும். இவற்றைத் தயாரித்து நிறுவனங்களிடம் பணம் பறிக்கும் வேலை அதிகமாகும்.

4. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது அதிருப்தி கொண்டவர் எண்ணிக்கை உயரும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த ஆண்டில் உபுண்டு லினக்ஸ், புதிதாக விண்டோஸ் தவிர்த்து மற்ற சிஸ்டங்களை நாடுபவர்களிடம் இடம் பெறலாம்.

விண்டோஸ் அளவிற்கு இது உயராவிட்டாலும், விண்டோஸ் மீது வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்கள் இருக்கும் பட்சத்தில், லினக்ஸ் புதிய இடம் பெறலாம். அப்படி இடம் பெறுகையில், இதுவரை அதிகம் தாக்குதலுக்கு ஆகாத லினக்ஸ் தொகுப்புகள் பக்கம் மால்வேர் உருவாக்குபவர்களின் ஆர்வம் திரும்பலாம்.

5. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு இந்த ஆண்டு அதிகம் இடம் பெறலாம். கூடுதலான பயன் தன்மையுடன், குறைவான விலையில் இவை கிடைப்பதாலும், மொபைல் வழி நெட்வொர்க் எளிதாகக் கிடைப்பதாலும், சேவைக் கட்டணம் குறைப்பாலும், மொபைல் போன்களிடையே ஸ்மார்ட் போன் நிச்சயம் அதிக எண்ணிக்கையில் இடம் பெறும்.

அப்படி இடம் பெறுகையில், ஸ்மார்ட் போன்களைத் தாக்கும் மால்வேர் புரோகிராம்களும் அதிக எண்ணிக்கையில் காணப்படும். எனவே 2010 ஆம் ஆண்டு, பலமுனை பயமுறுத்தல்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என லாவாசாப்ட் கருத்து தெரிவிக்கிறது.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo