போனுக்கு மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐ போனுக்கு அப்ளிகேஷன் புரோகிராமினைத் தருமா என்ன? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. ஆனால் உண்மை அதுதான்.
மைக்ரோசாப்ட் லைவ் லேப்ஸ் அத்தகைய ஒரு புரோகிராம் ஒன்றைத் தருகிறது. ஸீ ட்ரேகன் என இதற்குப் பெயர் இட்டுள்ளது. இதன் மூலம் ஐ போன் பயன்படுத்துபவர்கள் 3ஜி அல்லது வை–பி வழியாக பெரிய அளவிலான போட்டோ லைப்ரேரிகளை எளிதாகப் பெற்று காண முடியும்.
இந்த சாப்ட்வேர் தொகுப்புடன் 50 படங்கள் இணைத்துத் தரப்படுகின்றன. சில படங்கள் 10 கிகா பிக்ஸெல்கள் அளவில் மிகப் பெரியதாக உள்ளன. இதில் சில சாட்டலைட் மூலம் எடுத்த படங்கள், சில ஸ்பேஸ் போட்டோக்கள், சில அதிக ரெசல்யூசனில் உள்ள கலைப் படங்களாகும்.
இந்த சாப்ட்வேர் தொகுப்பின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது முற்றிலும் இலவசம். ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் அடுத்த மேம்படுத்தப்பட்ட சாதனத்திற்கு மாறிக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் வழங்கும் மைக்ரோசாப்ட் இவ்வாறு இலவச தொகுப்பினை எப்போதும் பயன்படுத்தும் வகையில் வழங்குவது புதுமைதான்.
இதனுடைய சொந்த மொபைல் பிளாட்பார்மில் இயங்கும் விண்டோஸ் மொபைல் இயக்கத் தொகுப்பிற்கான புரோகிராம்களைத் தந்தால் நாம் வாழ்த்தலாம். அதுவும் போனை மாற்றாமலேயே பயன்படுத்தும் படி அவை இருக்க வேண்டாம்