கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 9, 2010

காதலரை விட செல்போன்தான் பிடிக்கும்

காதலரை விட செல்போனை பெண்கள் அதிகம் நேசிப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் பான்புரோக்கர் பாரோ. அது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 4,000 இளம்பெண்களிடம் ஒரு ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. அதில் பாய் பிரண்டைவிட தங்கள் செல்போனை அதிகம் நேசிப்பதாக 10ல் 4 பெண்கள் தெரிவித்தனர்.

காதலரை பிரியும் போது கவலையை விட செல்போன் தொலைந்தால் ஏற்படும் கவலை அதிகம் என்றனர். அதிக பணம் தருவதாக கூறினால் பாய் பிரண்டை கைவிடத் தயாரா என்ற கேள்விக்கு 10ல் ஒரு பெண் ஓகே என்றாராம். ரூ.4.5 கோடிக்கு மேல் கொடுத்தால் காதலரை கைகழுவுவேன் என்பது அவரது கண்டிஷன். விலை கொஞ்சம் ஓவர்தான் இல்லையா?

Dinakaran

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo