கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 10, 2010

உங்கள் இணையத்தின் வேகம் !!!!!


பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் Condition-களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம்.

உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய  www.speedtest.net என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான Router-ருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.

தளத்திற்கு சென்றவுடன் Begin Test என்பதை Click செய்யவும்


உங்கள்  இணைய வேகம் அடங்கிய தகவல்கள் இப்படி கிடைக்கும்


அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

Tamil IT


  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo