விண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்!
விண்டோஸ் தொகுப்பில் செயல்படும் சில ஆச்சரியப்படத்தக்க புரோகிராம்கள் சிலவற்றைக் காண நேர்ந்தது. இவை வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்ட வையாக இருந்ததனால் இங்கு விபரங்கள் தரப்படுகின்றன.
1. ஐகால்சி – iCalcy
உங்களுக்கு ஐபோன் மிகவும் பிடிக்குமா? இந்த புரோகிராமிற்கும் ஐ போனுக்கும் என்ன சம்பந்தம்? ஐ போன் கிடைக்குமா என்ன? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது ஒரு கால்குலேட்டர்; இந்த கால்குலேட்டர் ஒரு ஐபோன் வடிவில் உங்களுக்கு மானிட்டரில் கிடைக்கும். அதனால் தான் இதன் பெயர் iCalcy. இது வழக்கமான, ஒரு சாதாரண கால்குலேட்டர் என்ன செய்திடுமோ அவை அனைத்தையும் செய்து காட்டும். ஐ போன் போல அகலவாக்கிலும் தோற்றம் தரும். ஜஸ்ட், ஒரு மாறுதலுக்கு இதனை இலவசமாக டவுண்லோட் செய்து பதிந்து இயக்கிப் பாருங்களேன். இந்த புரோகிராம் http://aviassin.wikidot.com/icalcy என்ற முகவரியில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது.
2. விண்டோஸ் 7 சூப்பர் பார்:
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து வெளியான தகவல்களில் அதன் தோற்றங்கள் சிலவற்றில், சிலருக்கு ஆர்வம் இருக்கலாம். இந்த சிஸ்டத்தின் சைட் பார் விஸ்டாவின் டாஸ்க் பார் போல இருப்பதாகப் பலர் கூறியுள்ளனர். இந்த விருப்பத்தின் அடிப்படையில் சீன கம்ப்யூட்டர் பொறியாளர் ஒருவர் டாஸ்க் பாரினைச் சற்று மாற்றி விண்டோஸ் 7 சூப்பர் பார் போல அமைத்துத் தந்துள்ளார். இந்த புரோகிராம் இலவசமாக http://flarejune.deviantart.com/art/TaskbarResizeToolforVista104078306 என்னும் முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்த்தும் கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் விசுவல் சி ப்ளஸ் ப்ளஸ் 2008 இல்லை என்று பொருள். அதனை இன்ஸ்டால் செய்து பின் இந்த புரோகிராமினை இயக்க வேண்டும். இந்த விசுவல் சி++ புரோகிராம் கிடைக்க http://www.microsoft.com/downloads/details.aspx?familyid=A5C842753B974AB7A40D3802B2AF5FC2&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. கிளாஸ் சி.எம்.டி. (GlassCMD):
“டெஸ்க்டாப்பில் கிடைக்கும் விண்டோ எல்லாம், சும்மா பளபளன்னு இருக்கணும்; அடுத்த பக்கம் ஊடுறுவித் தெரியும்படி கண்ணாடியா இருக்கணும்'' என்று என் நண்பர் ஒருவர் கதை அடித்துக் கொண்டிருப்பார். அவரைப் போன்ற விருப்பம் உள்ள நபர்களுக்காகவே கிளாஸ் சி.எம்.டி. என்ற புரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சின்ன புரோகிராம்; எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்; இதைக் கம்ப்யூட்டரில் பதிந்து, அதன் மீது டபுள்கிளிக் செய்தால், சிஸ்டம் ட்ரேயில், கடிகாரம் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது.உங்களுடைய கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை, ஊடுறுவிச் செல்லும் கண்ணாடியாக மாற்றுகிறது. இது உங்கள் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினை மாற்ற வில்லை. அதனை பின்புறம் உள்ள பொருட்களைக் காட்டும் கண்ணாடியாக மாற்றுகிறது. இந்த புரோகிராமினை http://komalo.deviantart.com/art/GlassCMDforVista121457868 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இது ராம் மெமரியில் எடுத்துக் கொள்ளும் இடம் 1 எம்பிக்குக் குறைவாக உள்ளதால், தாராளமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.
4. பயர்பாக்ஸ் கண்ணாடி (Glassy Firefox):
பயர்பாக்ஸ் பிரவுசரின் மிகப் பெரிய பலம் அது தரும் பாதுகாப்பு; அதற்கு அடுத்தபடியாக, அதன் ரசிகர்கள் கூட்டம். பல கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் தீம்ஸ், எக்ஸ்டென்ஷன்ஸ் என்ற பெயரில் பல அரிய, வேடிக்கையான மற்றும் கூடுதல் பயன்தரும் புரோகிராம்களை உருவாக்கி அவற்றை ஆட் ஆன் தொகுப்புகளாகத் தருகிறார்கள். நியோவின் (Neowin) என்பவர் அம்ப்ரூஸ் (Ambroos) என்னும் கிளாஸி பயர்பாக்ஸ் தீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனைப் பதிந்து இயக்க 64 பிட் விண்டோஸ் இயக்கத் தொகுப்பு இருக்க வேண்டும். ஜிமெயில் செக்கர் இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டால், நீங்கள் இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். இது பயர்பாக்ஸ் தளத்தில் கிடைக்கவில்லை. கிடைக்கும் முகவரி http://www.neowin.net/forum/index.php?s=ee8053c1716233beb4b6dcb3715500cc&showtopic=746714
5. நோட்பேட் கண்ணாடி (Transparent Notepad):
கிளாஸ் சிஎம்டி போல இது இருந்தாலும் சற்று வித்தியாசமான ஊடுறுவும் கண்ணாடியில் இயங்குவது போல நோட்பேடினை இந்த புரோகிராம் அமைக்கிறது. மற்ற புரோகிராம் போல, ஜஸ்ட் ஒரு கண்ணாடி இன்டர்பேஸ் தராமல், மொத்த நோட்பேட் புரோகிராமினையும் ஒரு கிளாஸ் தட்டில் அமைக்கிறது. ஒரு விதத்தில் வேர்ட்பேட் போலவும் செயல்படுகிறது. அனைத்து பைல்களையும் ஆர்.டி.எப். (.rtf) பார்மட்டில் சேவ் செய்கிறது. இருப்பினும் டி.எக்ஸ்.டி. (.txt) அல்லது எச்.டி.எம்.எல். (.html) பார்மட்டில் சேவ் செய்திடும் ஆப்ஷனையும் தருகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://sourceforge.net/projects/transnote/
6. கிளாஸ் 2கே (Glass 2K):
மற்ற புரோகிராம்கள் போல் கண்ணாடி போன்ற எபக்ட் தராமல், சற்று ஒளி ஊடுருவும் வகையில் இது விண்டோ வினை அமைக்கிறது. ஒவ்வொரு விண்டோவினையும் இவ்வாறு செயல்படுத்துகிறது. தற்போதைக்கு விண்டோஸ் 2000 மற்றும் எக்ஸ்பியில் மட்டும் செயல்படுகிறது. இதைச் செயல்படுத்தும்போது ‘Runtime DLL/OCX File error’ போன்ற எர்ரர் ஏற்பட்டால், இந்த புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இதற்கான தீர்வுகளும் கிடைக்கின்றன.