கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jan 10, 2010

டிவிட்டருக்கு மாற்றாக ஒரு புதிய சேவை


குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டருக்கு மாற்று என்று சொல்லக்கூடிய குறும்பதிவு சேவைகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


ப‌வுன்ஸ்,ஜெய்கூ,பிரைட்கைட்,போன்ற‌ மாற்று சேவைக‌ள் இருக்க‌வே செய்கின்ற‌ன‌ என்றாலும் டிவிட்ட‌ருக்கு ச‌வால் விட‌க்கூடிய‌தாக‌ அவை இல்லை என்ப‌தே விஷ‌ய‌ம்.

இனி ஒரு புதிய‌ குறும்ப‌திவு சேவை டிவிட்ட‌ர் அள‌வுக்கு புக‌ழ் பெற‌ முடியுமா? என்று தெரிய‌வில்லை.

இந்நிலையில் டிவிட்ட‌ருக்கு மாற்று என்னும் அறிமுக‌த்துட‌ன் புதிய‌தொரு டிவிட்ட‌ர் போன்ற‌ சேவை உத‌ய‌மாகியுள்ள‌து. http://txt.io/http://txt.io/ என்னும் அந்த‌ சேவை டிவிட்ட‌ரைவிட‌ எளிமையான‌து என்றும் என‌வே டிவிட்ட‌ர் ப‌ய‌ன்ப‌டுத்த‌ சிக்க‌ல‌ன‌தாக‌ இருக்கிற‌து என‌ க‌ருதுப‌வ‌ர்க‌ளுக்கான‌து என‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌‌து.

டிவிட்ட‌ரை விட‌ எளிமையான‌ சேவை கிடையாது . அதை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் எந்த‌ சிக்க‌லும் இல்லை.டிவிட்ட‌ரில் முக‌வ‌ரி க‌ண‌க்கை துவ‌ங்கி ஒற்றை வ‌ரியில் அல்ல‌து சிறிய‌தான‌ ஒரு சில‌ வ‌ரிக‌ளில் க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌த்தௌவ‌ங்க‌லாம்.அத‌ன்பிற‌கு பின்தொட‌ர்வ‌து,குறிச்சொல் இடுவ‌து என‌ எண்ண‌ற்ற‌ வ‌ச‌திக‌ள் இருக்கின்ற‌ன‌. அவை ச‌ற்று மிர‌ட்சியை த‌ர‌லாம். ஆனால் ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஆர‌ம்பித்துவிட்டால் அவ‌ற்றை எளிதாக‌ புரிந்து கொள்ள‌லாம்.

உண்மையில் இத்‌த‌கைய‌ வ‌ச‌திக‌ளே டிவிட்ட‌ரை ஒரு சாதா‌ர‌ண‌ சேவையில் இருந்து அசாத‌ர‌ண‌ சேவையாக‌ உய‌ர்த்தியுள்ள‌து.

இருப்பினும் டிவிட்ட‌ர் புரிய‌வில்லை அல்ல‌து சிக்க‌லான‌தாக‌ இருப்ப‌தாக‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் இருக்க‌கூடும் என்ற‌ ந‌ம்பிக்கையில் மேலே சொன்ன‌ சேவை உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

சேவை எளிமையான‌தோ இல்லையோ அத‌ன் முக‌ப்பு ப‌க்க‌ம் எளிமையான‌தாக‌ உள்ள‌து.சொல்ல‌ப்போனால் ப‌டு எளிமை.கூகுல் க‌ண‌க்கு மூல‌ம் புதிய‌ ப‌க்க‌த்தை உருவாக்கி கொள்ளுங்க‌ள் என்னும் வாச‌க‌த்தை கிளிக் செய்து உறுப்பின‌ராக‌ சேர்ந்தால் இந்த‌ சேவையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ துவ‌ங்கிவிட‌லாம்.
நினைப்ப‌தை டைப் செய்து ப‌திவு செய்ய‌லாம். ஆனால் அத‌னால் என்ன‌ ப‌ய‌ன் என்று தெரிய‌வில்லை.

உண்மையில் இந்த‌ சேவை டிவிட்ட‌ரை காட்டிலும் எளிமையான‌து அல்ல‌; ஆனால் டிவிட்ட‌ர் ஏன் சிற‌ப்பான‌தாக‌ இருக்கிற‌து என‌ புரிந்து கொள்ள‌ உத‌வ‌க்கூடிய‌து.எளிமை என்ப‌து ப‌யன்பாடு சார்ந்த‌து என்றால் டிவ்ட்ட‌ர் தான் அதில் ம‌ன்ன‌ன்.

- சைபர் சிம்மன்

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo